வியாழன், 14 ஏப்ரல், 2011

தேர்தல்காலத்து அலைவரிசை

மழைக்கான ஆயத்த
மொழிபேசி அசைந்தலயும்
கிளைகளில் மழைவெறிக்க
காத்திருக்கும் பறவையின்
கலைந்த சிறகுகளென
உன்நினைவுகள்
ஒழுங்கமைவற்று

தீண்டும் முதல்துளி
விரிக்கும் திரையில்
தோன்றி மறையும்
காதல்கால நிகழ்வுகள்
மழை கரைத்திழியும்
பறவைகளின்
பாதையொத்தது

உன்நினைவுகளை மட்டும்
கிளிப்பிள்ளையாய்
ஒப்புவிக்கும் கா(தேர்)தல்காலத்து
அலைவரிசையாம்
மாமழை போற்றுதும்
மாமழை போற்றுதும்.