திங்கள், 11 ஏப்ரல், 2011

வடிவேலு: 2011 தேர்தல் அடையாளம் காட்டிய ஆளுமை

உயிருனும் மேலான உடன்பிறப்புக்களே.. ரத்ததின் ரத்தங்களே.. நாமம் வாழ்க என பேச்சை ஆரம்பிக்கும் அரசியல்வாதிகளை பிரதியெடுக்காமல், என்ணன்னே நல்லாருக்கீங்களா..அப்பத்தா நல்லாருக்கீங்களா.. அக்கா தங்கச்சீங்கள்ளாம் நல்லாருக்கீங்களா என அடித்தட்டு மக்கள் அறிந்த மொழியில் பேச்சை ஆரம்பித்த நாள் முதல், வழிநெடுக வடிவேலுவை பார்க்க காத்திருக்கும் கூட்டம் நாளுக்கு நாள் ஏறுமுகம் தான்.

அஞ்சா செஞ்சனின் கணிப்பு எப்போதும் அடித்தட்டு மக்களின் எண்ணவோட்டங்களை நாடிபிடித்து சரியாக விக்கெட்டை வீத்தும் பாணி.. அதை அப்படியே ஊர் ஊராய் பரப்பி கட்சிக்கு ஓட்டுக்களை அறுவடை செய்யும் போர்வாளாய் வடிவேலு சுழன்றதில் கலைஞர் அம்மா விஜயகாந்த் முதல்.. சாணக்கியம் சதிவேலை என திரியும் சோ வரை ஆடிப்போய் உள்ளார்கள். திமுக’வின் எதிரணியில் ஒரு மாதத்திற்கு முன்பு வீசிய நம்பிக்கை காற்று இப்போது காற்று போன டியூபாக அமுங்கி கிடக்கிறது. வடிவேலு பாணியில் சொல்வதென்றால்: வட போச்சே...

எம்ஜியாருக்கு பிறகு மிகவும் எதார்த்தமாக, மக்களின் நெஞ்சை தொடுவதாக தனக்கேயுரிய நகைச்சுவை மிளிர வடிவேலு தனக்கென ஒரு ராஜபாட்டையில் போய்கொண்டிருக்கிறார். ஒரு நாளைக்கு 15 மணிநேரம் ஆதித்யா மற்றும் சிரிப்பொலியில் அவரை ஒலிபரப்பிய அலைவரிசைகள் இன்று அதன் பலனை அறுவடை செய்கிறார்கள், ஆச்சரியத்துடன்.

தேர்தலில் தென்மாவட்டங்களில் அழகிரி இழக்க இருந்த வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளித் தரும் வேலையை வடிவேலு கச்சிதமாக செய்தாலும்.. முதல் நாள் காட்டிய அதே பணிவோடுதான் அய்யா அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரி தளபதி தலைவர் கலைஞர் என ஒரு நம்ம்பிக்கைகுறிய தளபதியாக வடிவேலு இந்த ஒரு மாதத்திற்குள் பரிணமித்துள்ளார்.

ஒரு காமெடியன், ஒரு காமெடியனா.. கேவலம் ஒரு காமெடி நடிகன் காமெடி பீஸ் போன்ற ஏளன பார்வையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி விஜயகாந்தை அவர் நாக் அவுட் செய்ததில் விசயகாந்தின் வாக்குகள் அவுட். 108 அப்போ இருந்திருந்தா எங்கப்பாவ காப்பாத்தி இருப்பேன்னு அவர் கண்ணீர் சிந்துனப்போ.. கூட்டத்துல பல பேராலா அந்த வலிய உணர முடிஞ்சது. 108 உயிர் காக்கும்ன்னு மேடைக்கு மேடை எல்லோரும் சொன்னாலும், அதுக்கு தன் சொந்தவாழ்க்கை இழப்பை கண்ணீருடன் மக்களிடம் எடுத்துச்சென்ற லாவகம் கலைஞரே வியந்து பாராட்டிய ஒன்று.

Leaders raise up to the situations. Circumstance brings best out of the great leader. விசயகாந்த என்னும் இலக்கை நோக்கி எறிந்த அம்பு இத்துனை வீரியம் வாய்ந்ததென அழகிரியே நினைத்திருக்க வாய்ப்பில்லை. இவன் காமெடியன்.. பிரச்சாரத்தேடு இவன் வேலை முடிந்தது எனும் கருத்தோட்டம் கொண்ட பொதுமக்களின் சிந்தனையை தவிடுபொடியாக்குகிறது அவரின் அடுத்த அஸ்திரம் “தொகுதிக்கு என்ன வேணும்னாலும் எங்கிட்ட கேளுங்க.. நான் தலைவர் கலைஞரிடம் சொல்லி அதை நிறைவேத்தறேன்.. ஆனா விஜயகாந்த் அந்தம்மாக பக்கம் ஒக்காந்து பேசமுடியுமான்னு நீங்களே சொல்லுங்கன்னு அவர் மக்கள கேக்க அவங்க முடியாது என பதில் குரல் எழுப்ப.. இது இவன்கண் விடல் எனபதில் அழகிரி, ஸ்டாலினைவிட திறமைசாலி.

அழகிரிக்கு நார்த அலர்ஜி, ஸ்டாலின் தெற்குல கால் வைக்க முடியாது. கலைஞர் தமிழ்நாடு முழுவதும் தனிஆளாய் போராட வேண்டிய நிலையில் வடிவேலுவின் entry kept the momentum going for DMK. நாடறிந்த முகம், மக்களின் நாடித்துடிப்பறிந்து பேசியது, கூட்டத்தை பேசவைப்பது மிகப்பெரும் தலைவர்களுக்கே கைவந்த கலை.. ஆனால் வடிவேலுவோ.. வரும்... வராது என மக்களை கோரஸ் பாட வைத்து திமுக ஒரு மக்கள் கட்சி என்ற redefined, refined ideology’ஐ மக்கள் மனதில் ஆழமாக பதித்திவிட்டார்.

திமுக தலைமையும் அவரை அரவணைத்து, கலைஞரும் வடிவேலும் சந்திப்பு, ஆலோசனை என தினமும் அவரை தலைமையின் நம்பிக்கைகுறீய போர்வாள் என்ற செய்தியை ஊடகத்தில் வெளியிட்டபடியே இருக்க.. மக்கள் மனதில் நம்பிக்கை பிறக்கிறது.. ஓ வடிவேலு எந்த நேரத்திலும் தலைவரை சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது.. இவர் தேர்தல் நேர பிரச்சார கூத்தடி அல்ல என்ற எண்ணம் subconscious ஆக மனதில் உள்ளிறங்குகிறது.

ஒரு கைபுள்ளயாக, புலிக்கேசியாக, வண்டு முருகனாக, நாய் சேகராக நம்மை சிரித்துவைத்துக் கொண்டிருந்த ஒரு எளிய மனிதன் வளர்ச்சி இந்த தேர்தலின் ஒரு இனிய அதிர்ச்சி. Leaders are made, unless your father is a MLA, MP, CM or PM. :) Finally, விஜயகாந்த் என்ற ஆளுமையின் புனிதபிம்பத்தை சுக்கு நூறாக உடைத்ததில் ஆரம்பிக்கிறது ரீலுக்கு ரீல் அடிவாங்கும் இந்த கைப்புள்ளயின் அரசியல் வெற்றிப்பயணம். Comedy is a serious business. You bet. Hats off வடிவேலு அவர்களே. ம்ம்ம் கிளப்புங்கள்..

15 கருத்துகள்:

பொ.முருகன் சொன்னது…

இதோ, ஒரு தலைவன் உருவகிவிட்டான் என விஜயகாந்த்தை மக்கள் நினைக்க ஆரம்பித்த வேளையில்,அது ஒரு தண்ணிவண்டி என்று தெள்ளத்தெளிவாக போடுடைத்த பெருமை வடிவேலு வையே சேரும்.பிரசாரத்தின் ஆரம்பத்தில் விழுந்த அடியிலிருந்து கடைசிவரை விஜயகாந்த்தால் எழுந்திறுக்கவே முடியவில்லை.

Unknown சொன்னது…

நிச்சயமாக் முருகன். விஜயகாந்தை சரிகட்ட வடிவேலுதான் சரியான ஆள் என அழகிரி எடுத்த முடிவு, வடிவேலுவுக்கு magnum opus எண்ட்ரி. எதிராளிய வறுத்தெடுத்த மாதிரியும் ஆச்சு.. அரசியல்ல ஒரு நல்ல அடித்தளம் போட்ட மாதிரியும் ஆச்சு. அடுத்த தேர்தல்ல அஞ்சாசெஞ்சன் வடிவேலுவுக்கு ஒரு சீட்ட இப்பவே ஒதுக்கிட்டதா கேள்வி. No one made a quick impact in DMK fort like Vadivelu did. Quiet a time for him and he grabbed it with both hands and living upto it! தான் என்ன சொல்ல வரோம்கிறத மக்களுக்கு தெளிவா சொல்லத்தெரியலன்னா அப்புறம் என்ன தலமை பண்பு ஒரு தலைவனுக்கு அடிப்படை?? அந்த ஏரியாவுல வடிவேலு 3 சதம் நாட் அவுட் :)

Prakash சொன்னது…

Good Analysis

Unknown சொன்னது…

Thanks Bro.

Layman9788212602 சொன்னது…

When will the tamilians will leave this Cinema graze and think outside it? The uneducated and less educated village people get easily lured by the lights of tinsel world and fall like flies. Does Vadivelu know anything about GDP? the personal vengeance between two film stars is being cunningly used by politicians, who again has a background of film Industry. I am ashamed of us. WE get lured by tinsel glamour, The Tamil feeling and Caste feeling. That shows our narrow mindedness.

கபிலன் சொன்னது…

ஒரு வகையா நல்ல காமெடி. நகைச்சுவையா நல்ல பேசினாரு காமெடி பீசு வடிவேலு.
இவைகள் ஓட்டுகளாக மாறுமா என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்லிடும்.

அம்மா காலில் வடிவேலு விழும் போது நீங்கள் மறுபடியும் ஒரு பதிவு போட வேண்டும்...சொல்லிட்டேங்க..:)

Unknown சொன்னது…

Hi Layman,

Contrary to your name, your lines are too dense. :) The post is about Vadivelu-the layman and his rise to the prominence. GDP's are subject matter of economists. Chidambaram knows in and out of GDP, how many will listen to him? same goes with MM Singh. Leadership is not about being a full bright scholar. Its about pulling the people towards you. There are guys who spent their life times in politics are unable to achieve the feat what Vadivelu has shown us in this one month. So the post is an analysis on the characteristic traits that sets him apart from the rest. Instead of making it a separate post.. let me stop it here. :)

Unknown சொன்னது…

இவ்ளோ கூட்டம் கூட்டி ஜனரஞ்சகமா பேசுன வடிவேலுவே ஓட்டு சேர்க்க முடியலன்னா..என்ன பேசுறோம்னே தெரியாத, வேட்பாளரை மிதிக்க கூடிய, கூட்டணி கட்சி கொடிய இறக்க சொல்லுற, நான் தப்பு தப்பா பேச மக்கள் தான் காரணம்னு சொல்லுற விசயகாந்துக்கு எவ்வளவு ஓட்டு விழும்னு சொல்லுங்க?!! If Jay has lost the advantage she enjoyed in Feb or March, VJ is the only reason for that.

இனி வடிவேல சீண்டசீண்ட he will be growing. No politicians will intend to do it. He is more courageous than Vijay or Ajith or anyone else. Atleast he will be a regular fixture in Sun / Kalaignar TV Movie houses. So he has made a smart move. That what all i'm intend to explain here. :)

அஞ்சா சிங்கம் சொன்னது…

நல்ல பதிவு நான் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன் நீங்கள் முந்திவிட்டீர்கள் ..........
இனிமேல் வடிவேலுவை சீண்டும் தைரியம் எந்த கட்சிக்கும் வராது அது அவர்களுக்கே ஆப்பாக முடியும் என்று தெரியும் .
நாயகனாக வளம் வந்த விஜயகாந்தை ஒரு மாதத்தில் காமடியனாக மாற்றிவிட்டார் ........

அஞ்சா சிங்கம் சொன்னது…

நல்ல பதிவு நான் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன் நீங்கள் முந்திவிட்டீர்கள் ..........
இனிமேல் வடிவேலுவை சீண்டும் தைரியம் எந்த கட்சிக்கும் வராது அது அவர்களுக்கே ஆப்பாக முடியும் என்று தெரியும் .
நாயகனாக வளம் வந்த விஜயகாந்தை ஒரு மாதத்தில் காமடியனாக மாற்றிவிட்டார் ........

அருள் சொன்னது…

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

thamizhparavai சொன்னது…

nice post... I like it...

Unknown சொன்னது…

நன்றி தமிழ்ப்பறவை.

Saran சொன்னது…

மிக அருமை....
மிக அருமை.... வடிவேலுவை பல வருடங்களாக கூர்ந்து கவனித்து வருபவன் என்ற அளவில் உங்களது கட்டுரை 100 % உண்மையே. வடிவேலு மிக சிறப்பாக அவரது வேலையை செய்திருக்கிறார், மக்களை முகம் சுளிக்க வைக்காமல் ஏனென்றால் எங்குமே அவர் ஜெயா பற்றி மரியாதை குறைவஹா பேசவே இல்லை. அவரது டார்கெட் விஜயகாந்த் மட்டுமே. காமெடி நடிகர் தவறிய இடம் அது. அவர் கலைஞரை தரக்குறைவாக பேசியதை ரஜனிகாந்த் கண்டித்தது அனைவரும் அறிந்தது.

Saran சொன்னது…

மிக அருமை....
மிக அருமை.... வடிவேலுவை பல வருடங்களாக கூர்ந்து கவனித்து வருபவன் என்ற அளவில் உங்களது கட்டுரை 100 % உண்மையே. வடிவேலு மிக சிறப்பாக அவரது வேலையை செய்திருக்கிறார், மக்களை முகம் சுளிக்க வைக்காமல் ஏனென்றால் எங்குமே அவர் ஜெயா பற்றி மரியாதை குறைவஹா பேசவே இல்லை. அவரது டார்கெட் விஜயகாந்த் மட்டுமே. காமெடி நடிகர் செந்தில் தவறிய இடம் அது. அவர் கலைஞரை தரக்குறைவாக பேசியதை ரஜனிகாந்த் கண்டித்தது அனைவரும் அறிந்தது.

கருத்துரையிடுக