புதன், 29 ஜூலை, 2009

ஆயிரத்தில் ஒருவனின் வரலாற்றுப் பிழை - வைரமுத்து மற்றும் கர்நாடக சங்கீதம்




தமிழை புனரமைத்ததில் சோழர்களின் பங்கு மகத்தானது. பல்லவ காலம் வரை பிராகிருதம், சமசுகிருதம் என அரசாங்க கல்வெட்டுகளில் இடம்பெற்ற நிலை மாறி, தமிழ் முழுமூச்சுடன் அரசாங்க மொழியாக நிலைபெற்றது சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தான். ராஜராஜரின் காலம் முதல் தமிழ் கோயில் மொழியாகவும் நிலைபெற்றது.

ராசராசரின் காலம் 10ஆம் நூற்றாண்டு. அக்காலத்திய ராசராசேசுவர உடையார்(தஞ்சை பெரிய கோயில்) கோவிலின் கல்வெட்டுகள் மிகத்தெளிவாக திருப்பதிகம் கோவிலில் ஓதப்பட்டதாக சொல்கின்றன. திருமறை கண்ட சோழன் என ராசராசர் மிகவும் மதிப்புடன் வழங்கப்படுகிறார்.

பார்க்க: கல்வெட்டின் படி இணைப்பு.

சம்பந்தர், நாவுக்கரசர் மற்றும் நம்பியாண்டார் நம்பி பெயர்களில் தனித்தனி குழு அமைத்து 48 பேர் திருப்பதியம் ஓதுவதும் இருவர் அதற்கு வாசிப்பதும் என 50 பேர் கொண்ட குழுவுக்கு அளிக்கப்பட்ட ஊதியம் கல்வெட்டாக வடிக்கபப்ட்டுள்ளது தஞ்சை பெருவுடையார் கோவிலில்.

நிற்க.

ஞாயிரன்று ஒளிபரப்பான ஆயிரத்தில் ஒருவன் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் நெல்லாடிய நிலமெங்கே எனும் பாடலுக்கு வைரமுத்து அவர்கள், நீலகண்ட சாஸ்திரி முதல் ராசமாணிக்கனார் வரை வரலாற்றை மீள்வாசிப்பு செய்து பாடல் எழுதியதாக தம்பட்டம் அடித்தார். இருந்து விட்டு போகட்டும் - கூடவே நித்யசிரி மகாதேவன் ஒரு தெலுங்கு பாடலை பாடினார். துணுக்குற்றேன் நான்.
சோழர்கள் காலத்தில் ஏது தெலுங்கு கர்நாடக சங்கீத பாடல்??

கர்நாடக சங்கீதத் தந்தையான புரந்தரதாசர் விஜயநகர பேரரசர் காலத்தவர். காலம் பதினைந்தாம் நூற்றாண்டு. விஜயநகர பேரரசின் வருகையை முன்னிட்டே தமிழகத்தில் தெலுங்கின் வாசம் ஆரம்பிக்கிறது. அதுவும் ஆட்சி மொழியாக இல்லாமல் குமுகாய வழக்கில் பேச்சு மொழியாக. 16-17 நூற்றாண்டில் தெலுங்கு கருநாடக இசையில் - தமிழகத்தில் நுழைகிறது.

இந்த பின்புலத்தில் சோழர்கள் குறீத்த வரலாற்று படமான ஆயிரத்தில் ஒருவனில் (சோழம் என பாடல் வரிகளில் வருகின்றது மற்றும் அவர்கள் பெரியகோவிலை பலமுறை விளம்பரத்தில் காட்டினார்கள்! ) தெலுங்கு பாடல எந்த வரலாற்று அறிவு ஜீவியின் கருத்தமைவு எனத்தெரியவில்லை. துணை இயக்குநர்கள் சற்று சிரத்தை எடுத்திருக்கலாம். தெலுங்கு சோழர்கள் என ஒரு பிரிவு இருந்த போதிலும் இவர்கள் பல்லவ-சோழ கூட்டுறவில தெலுங்கு தேசத்தில் ஆட்சிபுரிந்தவர்கள், தமிழே அப்போதும் ஆட்சிமொழி.

தெலுங்கு முழுவீச்சில் தற்போதைய ஆந்திராவில் வலம்வரத்துவங்கியது கிருஷ்ணதேவராயரின் காலத்தில். அதும் அங்கு - தமிழகத்தில் அல்ல. எனவே தமிழுக்காய் வாழ்ந்து மடிந்த நிகரில் சோழமண்டல அரசர்கள் தெலுங்கு பாடலை கேட்பது செல்வாவின் புண்ணியத்தில் தான்! கடல்கடந்து வென்றாலும் இன்னமும் அவர்களின் கல்வெட்டுகள் தமிழையே தாங்கி நிற்கிறது. கோலார் /பட்கல் என தூரத்து கன்னட கோயில்களிலும், பெங்களூர் கோயிகளிலும் தமிழ் கல்வெட்டுகள் இன்னமும் உள்ளன.

வைரமுத்துவாவது சொல்லி இருக்கலாம். நீலகண்ட சாஸ்திரியும் ராசமாணிக்கனாரும் அவருக்கு புகட்டிய வரலாற்று அறிவு இதுதானா?? வசனம் என்றால் விட்டுவிடலாம், பாடல் என்பது வைரத்தின் இலாகா தானே?? 12 இல்லை 13-14ம் நூற்றாண்டு என்றாலும் அது தமிழிசை தான். தெலுங்கில் கருநாடக சங்கீதம் பாடப்பட்டது மிகச்சமீபமாகவே. அதற்குமுன் திருப்பதிகமும், பாசுரங்களும் நெஞ்சை அள்ளும் தமிழில் கோயில்கள் தோறும் பாடப்பட்ட பொற்காலம் அது.

பரதநாட்டியம் அல்லது பழந்தமிழ் என்றாலே தெலுங்கு பாடல்கள் என்ற பொதுப்புத்தியை எந்தச்செருப்பெடுத்து விளாசுவது எனத்தெரியவில்லை.

15 கருத்துகள்:

shabi சொன்னது…

இதை அப்படியே எல்லா வைரமுத்து அடிப்பொடிகளுக்கு அனுப்புங்கள்

Unknown சொன்னது…

அடிப்பொடிகளின் பட்டியல் என்னிடம் இல்லை. :)
இருந்தால் தந்துதவுங்கள்.. அனுப்பிடுவோம். ;)

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

நல்ல இடுகை, வரலாற்று ஆர்வலர்களின் பார்வையில் விவாதித்தால் நன்றாக இருக்கும்

வந்தியத்தேவன் சொன்னது…

என்ன காரணத்திற்காக செல்வராகவன் தெலுங்கை தமிழிற்க்கு நுழைக்கிறார். மன்னிக்கவும் செல்வா தெலுங்கர் என்பதை மறந்துவிட்டேன். தனுஷே ஒரு பேட்டியில் தாங்கள் வீட்டில் தெலுங்குதான் பேசுவதாக தெரிவித்தார். வைரமுத்து காசுக்காக எதையும் செய்வார். இல்லையென்றால் கவியரசின் சிமமாசனத்தில் தானே சென்று அமர்ந்துவிட்டு தனக்குத் தானே கவிப்பேரரசு என பட்டம் சூட்டிக்கொள்வாரா?

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

பின் தொடர்பவர்கள் பட்டியலை இணையுங்கள் நண்பரே: உங்கள் தளத்திற்கு நாங்கள் வருவதற்கு எளிதாக இருக்கும்

Unknown சொன்னது…

சுரேஷ், விவாதிக்க வேண்டும் என்பதே என் விருப்பமும். ஆதாரங்களோடு விவாதிக்கையில் உண்மை விளங்கும்.

பிந்தொடரும் நிழலை விரைவில் இணைக்கிறேன். :) சுட்டியமைக்கு நன்றி.

Unknown சொன்னது…

வந்தியத்தேவன்,

வைரமுத்து மொக்கை பாடல்களை எழுதிப்போகட்டும், அது தமிழாக இருக்கும் பட்சத்தில் நமக்கேதும் வெறுப்பில்லை. நாம் காதலோடு வலம்வரும் பொற்கால உலகமான சோழவரலாற்றில் தெலுங்கை புகுத்துவதை அவர் பார்த்துக்கொண்டிருந்தது வெட்கக்கேடு.

மதுரைக்காரர்களின்(பாண்டியர்களின்)கழுத்தறுப்பு இன்னமும் சோழத்தை துரத்துவது தான் சோகம். :(

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

//மதுரைக்காரர்களின்(பாண்டியர்களின்)கழுத்தறுப்பு//

பாண்டியர்களை தெலுங்கர்கள் என்கிறீர்களா..., தலைவரே.....,

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

வைரமுத்து அவர்கள் தனக்கு கண்ணதாசனின் பட்டத்தை தனக்கு வேண்டாம் என்பது சரித்திரம் சொல்லும் செய்தி

Unknown சொன்னது…

இல்லை இல்லை.. பாண்டியர்கள் என்றுமே சோழர்களை சூழ்ச்சி மூலம் வீழ்த்த முயன்றவர்கள் (சேரர்கள், சாளுக்கியர்கள் மற்றும் ஹோய்சாலர்களின் துணையுடன்).

வைரமுத்து மதுரைக்காரர் அல்லவா.. எனவே அப்படி குறிப்பிட்டேன். :). இது வரலாறு படித்தவர்களுக்காக.

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

வைரமுத்து அவர்கள் தனக்கு கண்ணதாசனின் பட்டத்தை தனக்கு வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்தார் என்பது சரித்திரம் சொல்லும் செய்தி

வந்தியத்தேவன் சொன்னது…

//SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…
வைரமுத்து அவர்கள் தனக்கு கண்ணதாசனின் பட்டத்தை தனக்கு வேண்டாம் என்பது சரித்திரம் சொல்லும் செய்தி//

அப்படியென்றால் அரசை விட ஏன் அவர் பேரரசை விரும்பவேண்டும். வைரமுத்து நல்ல கவிஞராக இருக்கலாம் ஆனால் நல்ல மனிதரல்ல.

இரவுப்பறவை சொன்னது…

வைரமுத்துவின் மீதான தனிப்பட்ட விமர்சனகளை விட..
அவர் கருத்தின் மீதான விவாதம் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது
எனது கருத்து..
நல்ல பதிவு.. மேலும் இதுபற்றிய விவரங்கள் இருந்தால் அளிக்கவும்...

SurveySan சொன்னது…

//பரதநாட்டியம் அல்லது பழந்தமிழ் என்றாலே தெலுங்கு பாடல்கள் என்ற பொதுப்புத்தியை எந்தச்செருப்பெடுத்து விளாசுவது எனத்தெரியவில்லை. //

:)

படம் வரதுக்கு முன்னாடி இப்படி சொல்றது சரியில்லை. யாருக்கும் கதை தெரியாது.
படத்தில், ஹீரோயின் தெலுங்கு நாட்டிலிருந்து வந்து டான்ஸ் ஆடறவரா இருந்தா என்ன பண்ணறது?

கருத்துரையிடுக